பவுலிங் போட்டால் விரலை வெட்டிவிடுவோம் என்று மிரட்டினர்! இந்திய வீரர் அஸ்வின் பகிர்ந்த தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான அஸ்வின், தன்னுடைய சிறுவயதில் சந்தித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தமிழக வீரர் அஸ்வின், அதன் பின் மூன்று வித போட்டிகளிலும் தன்னுடைய அற்புதமான பந்து வீச்சில் மூலம் மிரட்டி வந்தார்.

ஒரு சில போட்டிகளில் இவர் பேட்ஸ்மேனாகவும் கலக்கியுள்ளார். 70 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இருப்பினும் சமீபகாலமாக மோசமான பார்ம் மற்றும் இளம் வீரர்களின் வருகையால், அஸ்வின் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தன்னுடைய சிறுவயதில் கிரிக்கெட் குறித்த அனுபவங்களை பகிர்ந்தார்.

அப்போது, இருக்கும் போது உள்ளூர் கிரிக்கெட்டில் நான் சென்னையில் விளையாடி கொண்டிருந்தேன். அப்போது, இறுதிப்போட்டிக்கு எங்கள் அணி தகுதி ஆனதும், நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட கும்பல் ராயல் என்பீல்டு வாகனத்தில் வந்து என்னை பின்புறம் அமர்த்தி ஒரு கடைக்கு கொண்டுசென்றனர்.

மேலும் அங்கு டீ, சமோசா மற்றும் பஜ்ஜி போன்ற அனைத்தையும் எனக்கு வாங்கி கொடுத்தனர்.

பின்னர் அதை சாப்பிட்ட பின் போட்டிக்கு போகலாம் நேரமாகிவிட்டது என்று நான் கூறியபோது அவர்கள் என்னை மிரட்டத் தொடங்கினார்கள்.

எதிரணி வீரர்கள் எனக்கு தெரிந்தவர்கள் நீ இன்றைய போட்டியில் விளையாட கூடாது. அதனால் தான் உன்னை கூட்டி வந்தோம். மீறி நீ பந்து வீசினால் உனது விரலை வெட்டி விடுவோம் என்று அவர்கள் என்னை மிரட்டியதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்