இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் பிரபல வீரர்! வெளியான அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரேன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியானது இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு - 20 போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பயிற்சிப் போட்டியிலும் விளையாடவுள்ளது.

இத்தொடரில் விளையாடவுள்ள 20 பேர் கொண்ட உத்தியோக இலங்கை அணியை கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதில் ஒருநாள் தொடருக்கான அணித் தலைவராக திமுத் கருணாரத்னவும், இருபதுக்கு - 20 போட்டிக்கான அணித் தலைவராக லசித் மலிங்கவும் பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி பயிற்சிப் போட்டிக்காக உபுல் தரங்க இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்