ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஓய்வை அறிவிக்கும் CSK அணியின் நட்சத்திர வீரர்? வெளியான தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இந்திய வீரர், இந்த தொடருக்கு பின் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது இளம் வீரர்கள், கிடைக்கும் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்து வருவதால், சீனியர் வீரர்களுக்கு இடம் கிடைப்பது கடினமாகிவிடுகிறது.

அந்த வகையில், சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், அஸ்வினின் வருகைக்கு பின் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். அதன் பின் தற்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

இதற்கிடையில் ஹர்பஜன் சிங், தமிழில் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவர் இந்த ஐபிஎல் தொடரோடு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் முடிந்தவுடன் ஹர்பஜன் சிங்கே அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்