இந்திய அணியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்... இளம் வீரர் ஒருவருக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீரர் ஷீகர் தவான் வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது தோள்பட்டை காயம் காரணமாக நியூசிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விலகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களுருவில் நடந்த ஆட்டத்தின் போது பந்த தடுக்க டைவ் செய்த போது தவான் மோசமாக விழுந்தார்.

அதனையடுத்து மைதானத்தை விட்டு வெளியேறிய தவான், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துடுப்பாட களமிறங்கவில்லை.

போட்டிக்கு பின் இடம்பெற்ற கொண்டாட்டங்களிலும் அவர் தென்படவில்லை. இந்திய அணி நிர்வாகம்தவானுக்கான மாற்று வீரரை தற்போது வரை அறிவிக்கவில்லை.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 5 டி-20, 3 ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகள் மோதும் டி-20 தொடர் ஜனவரி 24ம் தேதி தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து பிப்ரவரி 5 முதல் மூன்று ஒருநாள் தொடரும், பிப்ரவரி 21 முதல் இரண்டு டெஸ்ட் தொடர்களும் நடைபெறும்.

தவனுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரில் ஒருவர் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்திய டி-20 அணி வீரர்கள் விபரம்: விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா (துணைத்தலைவர்), கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரத் பும்ரா , நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்கூர். தவானுக்கு பதிலாக விரைவில் ஒரு வீரர் அறிவிக்கப்படுவார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers