ஒருநாள் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது! முதலிடத்தில் யார்?

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

இதன்படி இங்கிலாந்து அணி (125 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி (121 புள்ளிகள்) தனது 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோஹ்லி (886 புள்ளிகள்), ரோகித் சர்மா (868 புள்ளிகள்) முறையே முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். பாபர் அசாம் (பாகிஸ்தான்), 3-வது இடத்திலும், டுபிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா) 4-வது இடத்திலும், ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) 5-வது இடத்திலும் தொடருகின்றனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா (இந்தியா), டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து), முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனர்.

ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...