காலால் எட்டி உதைத்து அசத்தல் ‘ரன் அவுட்’..! மைதானத்தையே வியக்க வைத்த நட்சத்திர வீரர்: குவியும் பாராட்டு

Report Print Basu in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் பந்தை காலால் எட்டி உதைத்து ரன் அவுட் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சிட்னி மைதானத்தில் நடந்த போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற தண்டர் பந்து வீச முடிவு செய்தது.

16 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி சிக்ஸர்ஸ். 15.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 76 ஓட்டங்கள் எடுத்தது.

முதல் ஓவரை தண்டர் வீரர் கிறிஸ் மோரிஸ் வீச, துடுப்பாடிய சிக்ஸர்ஸ் வீரர் டேனியல் ஹியூக்ஸ், பந்தை ஸ்ட்ரோக் வைத்து விட்டு ஓட்டங்கள் எடுக்க முயன்றார்.

எனினும், எதிரே வந்த பந்து வீச்சாளர் மோரிஸ், பந்தை காலால் எட்டி உதைக்க பந்து நேராக ஸ்டம்ப்பில் பட்டது.

மோரிஸ் எதிரே வருவதை கண்ட உடனே திரும்பிய துடுப்பாட்டகாரர் ஹியூக்ஸ், வேகமாக ஓடி கோட்டிற்குள் பேட்டை வைக்க முயன்றார், ஆனால் பேட் தரையில் சிக்கி கையை விட்டு நழுவியதால் அவரால் கோட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை.

திறமையாக பந்தை காலால் உதைத்து ரன் அவுட் செய்த கிறிஸ் மோரிஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதன் மூலம் ஹியூக்ஸ் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். தற்போது, 16 ஓவர்களில் 77 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers