கோஹ்லி சதம் அடிப்பாரா? சம நிலையில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள்

Report Print Abisha in கிரிக்கெட்

இன்று மும்பையில் நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் கோஹ்லி சதம் அடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான, ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டம் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு பின்னர் தற்போது தான் இந்த போட்டியில் சந்திக்கின்றனர். எனவே இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்தால், கேப்டனாக அதிகம் சதம் அடிந்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இதற்கு முன் அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளில் 41 சதங்கள் அடித்திருந்தார். கோஹ்லி தற்போது 169 போட்டிகளில் 41 சதங்கள் அடித்துள்ளார்.

இன்றைய போட்டியில் அவர் சதம் அடித்தால், 42 சதங்கள் பெற்று முதலிடம் பெறுவார்.

இன்று நடைபெறும் போட்டியில், கோஹ்லி நான்காவது வீரராக களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய போட்டி மதியம் 1:30க்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...