மலிங்காவை கண்முன் கொண்டு வந்த இந்திய வீரர்: துல்லியமான யார்க்கரால் இலங்கை வீரரை அவுட்டாக்கிய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தன்னுடைய துல்லியமான யார்க்க மூலம் குசல் பெரேராவை அவுட்டாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, இங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் போட்டி மழையால் தடைபட, இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்டத்தின் 6-வது ஓவரின் முதல் பந்தை வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தன்னுடைய துல்லியமான யார்க்கரை வீசினார்.

அதை எதிர் கொண்ட குசல் பெரேரா தடுத்து ஆட முடியாமல் விட, ஸ்டம்புகள் தெறித்தன. இதனால் குசல் பெரேரா ஒன்றும் செய்ய முடியாமல் மைதானத்தில் சில நிமிடம் நின்ற படியே ஸ்டம்பை பார்த்து விட்டு சென்றார்.

சைனியின் இந்த துல்லியமான யார்க்கர், மலிங்காவை மீண்டும் கண் முன் கொண்டு வந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...