தென் ஆப்பிரிக்கா வீரரை அசிங்க அசிங்கமாக திட்டிய இங்கிலாந்து வீரர் பட்லர்: ஸ்டம்ப் மைக்கில் சிக்கிய ஓடியோ

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தென் ஆப்பரிக்கா வீரரை அசிங்க அசிங்கமாக திட்டியது ஓடியோவுடன் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.

நேற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 189 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இதன் மூலம் தொடர் 1-1 என்ற வெற்றி கணக்கில் சமனில் உள்ளது.

கேப் டவுன், நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டின் கடைசி நாள் போட்டியின் போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், துடுப்பாடிய தென் ஆப்பரிக்கா வீரர் வெர்னான் பிலாண்டர் அசிங்க அசிங்கமாக திட்டியது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின் போது, பிலாண்டர் அடித்த பந்து நேராக பீல்டரிடம் செல்ல பந்தை பிடித்த இங்கிலாந்து வீரர், விக்கெட் கீப்பரை நோக்கி பந்தை வீசினார்.

அப்போது, பந்து தன்னை நோக்கி வருவதை அறிந்த பிலாண்டர் உடனே நகர்ந்தார், இதனால், பந்து விக்கெட் கீப்பர் பட்லரின் மேல் தாக்கியது. இதனால், கடுப்பான அவர், பிலாண்டரை பார்த்து அசிங்க அசிங்கமாக திட்ட தொடங்கினர்.

பிலாண்டர் முறைத்த போதும் நிறுத்தாமல் பட்லர் திட்டியுள்ளார். பட்லர் திட்டியது ஸ்டம்ப்பில் இருந்து மைக்கில் பதிவாகியுள்ளது. குறித்த காட்சி ஓடியோவுடன் இணையத்தில் வைரலாக பலர் பட்லரை கடுமையாக சாடியுள்ளனர்.

மேலும், மோசமாக நடந்துக்கொண்ட பட்லர் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...