இலங்கை அணியை வீழ்த்திய இந்தியா! வெற்றி குறித்து பேசிய அணித்தலைவர் கோஹ்லி

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அது குறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி பேசியுள்ளார்.

இலங்கை - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

வெற்றிக்கு பின்னர் பேசிய கோஹ்லி, இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கடந்த தொடரில் இருந்து பலத்துக்கு மேல் பலம் பெற்று திகழ்கிறது.

ரோகித் சர்மா இல்லாமல் பெற்ற இந்த வெற்றி மகத்தானது. இது அணிக்கு நல்ல அறிகுறியாகும்.

நவ்தீப் சைனி ஒருநாள் போட்டியில் இருந்து வந்துள்ளார். அவரது பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் அவர் மேலும் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்.

20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். நெருக்கடியான கட்டத்தில் இளைஞர்கள் வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என்று விரும்புகிறேன்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் ஒரு வீரர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் தேர்வு செய்யப்படுவார் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...