திணறிய இலங்கை வீரர்கள்... முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தானதை அடுத்து, இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் குசல் பெரேரா (34) தவிர மற்ற அனைத்து வீரர்களும் திணற ஆரம்பித்ததால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 142 ரன்களை மட்டுமே குவிந்திருந்தது.

இதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், துவக்க ஆட்டக்காரர்களான லோகேஷ் ராகுல் (45) - ஷிகர் தவான் (32) சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களும், அணியின் கேப்டன் விராட்கோஹ்லி 30 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதன்மூலம் இந்திய அணியானது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...