இலங்கையில் இருந்து கொண்டு வந்திருக்கலாம்! இந்திய கிரிக்கெட் வாரியத்தை கிண்டலடித்த பிரபலம்! வைரல் புகைப்படம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்தியாவில் நடந்த டி20 போட்டியின் போது மழை நின்றபின் ஆடுகளத்தை உலர வைக்க ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டது பலத்த கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன் தினம் நடைபெற இருந்தது.

இரவு 6.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. விராட் கோஹ்லி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

7 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு தயாராக இருந்த நிலையில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது.

மழை நின்றதும் மைதான ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் வேலைகளை துரிதமாக செய்தனர். ஆனால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தது. அதை உலர செய்ய ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தினர். என்றாலும் பிட்ச் உலரவில்லை. இதனால் போட்டி கைவிடப்பட்டது.

உலகில் உள்ள கிரிக்கெட் போர்டுகளில் பிசிசிஐ-தான் பணக்கார போர்டு. இவ்வளவு பணம் இருந்தும், நவநாகரீக காலத்தில் ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் பயன்படுத்தியதால் பலரும் அதை கிண்டல் செய்தனர்.

முக்கியமாக இலங்கையை சேர்ந்த பிபிசி செய்தியாளர் அசாம் அமீம் இது தொடர்பில் கிண்டலாக ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், ஆடுகளத்தை உலர செய்ய அயன் பாக்ஸ் மற்றும் ஹேர் டிரையர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணி மழை சமயங்களில் பயன்படுத்தும் கவர்களை பிரேமதாசா மைதானத்தில் இருந்து கொண்டு வந்திருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்