நீங்க செய்த தப்புக்கு 5 ரன் அபராதம்... நடுவரிடம் வாக்குவாதம் செய்த வார்னர்! வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நடுவர் 5 ஓட்டங்கள் அபராதம் வழங்கியதால், அவுஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையே நடந்த மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, துவக்க வீரரான வார்னர் பந்துகளை வீணடிக்காமல் ஓட்டங்கள் எடுப்பதிலே கவனமாக இருந்தார்.

(Photo by Ryan Pierse/Getty Images)

இதனால் ஒரு ஓட்டம், இரண்டு ஓட்டம் என ஓடி, ஓடி எடுத்தார். அப்படி ஆட்டத்தின் 52-வது ஓவரின் போது வார்னருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய லபுஷேன் செய்த தவறால் நியூசிலாந்து அணிக்கு 5 ஓட்டங்களை நடுவர் அலீம் தர் வழங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வார்னர், உடனடியாக இது குறித்து நடுவர் அலீம் தர்ரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொதுவாக மைதானத்தில் துடுப்பாட்ட வீரர்கள் ஓடும் போது, மைதானத்தின் தடை செய்யப்பட்ட பகுதிகளிலோ, அல்லது நடுவிலோ வேண்டும் என்று உள்நோக்கத்துடன் ஆடுகளத்திற்கு சேதம் விளைவிக்கும் வகையில் ஓட்டம் ஓடக் கூடாது.

ஆனால் வார்னரும், லபுஷேனும், நாதன் லயன் வழக்கமாக டார்கெட் செய்து வீசும் பகுதிகளிலேயே ஓடினர். ஏனெனில் இந்த போட்டியில் அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் சிறப்பாக வீசி வருவதால், அவருக்கு சாதகமாக்கும் வகையில் ஓடியுள்ளனர்.

இதனால் 50-வது ஓவரின் போது நடுவரான அலீம் தர் லபுஷேனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் 52-வது ஓவரில் வார்னர் மற்றும் லபுஷேn இரண்டு பேரும் மீண்டும் ஆடுகளத்திற்குள் ஓடியதால், அலீம் தர் அவுஸ்திரேலியா அணிக்கு 5 ஓட்டங்கள் அபராதம் விதித்தார்.

Credit: Getty Images

அதாவது இந்த 5 ஓட்டம் நியூசிலாந்து அணிக்கு தரப்படும், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 251 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தற்போது அலீம் தர் 5 ஓட்டம் அபராதம் விதித்த பின் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் 256 ஓட்டங்கள் எடுத்ததாக குறித்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்