39 பவுண்டரி.. முச்சதம் அடித்து கர்ஜித்த வார்னர்! பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலிய ஓட்டங்கள் குவிப்பு

Report Print Basu in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்டகாரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது. இந்நிலையில், இரு அணிகள் மோதிய பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி நவம்பர் 29ம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் குவித்தது. வார்னர் 166 ஓட்டங்களுடனும், லபுஸ்சாகனே 126 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நவம்பர் 30ம் திகதி இரண்டாவது நாள் முதல் இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 589 ஓட்டங்களுக்கு டிக்ளர் செய்தது. வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 335 ஓட்டங்களுடனும், வாட் 38 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

418 பந்துகளை சந்தித்த வார்னர், 39 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 335 ஓட்டங்கள் குவித்தார். இதன் மூலம் அடிலெய்ட் மைதானத்தில் அதிக ஓட்டங்கள் விளாசிய வீரர் என்ற வரலாறு படைத்துள்ளார் வார்னர்.

பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்