ரிஷப் பந்த் தனது வாய்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால்!.... எச்சரிக்கை விடுத்த முன்னாள் வீரர்கள்!

Report Print Abisha in கிரிக்கெட்

ரிஷப் பந்த் தன்னை நிருப்பிக்க தவறினால் வாய்பை இழந்து விடுவார் என்று முன்னார் வீரர் விவி லங்க்ஷமணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ”மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருப்பது, ரிஷபந்துக்கு எச்சரிக்கை தரும் செய்தியாக அமைந்துள்ளது. இனிவரும் போட்டிகளில், ரிஷப் பந்த் தன்னை நிரூபிக்க வேண்டும் அல்லது சஞ்சு சாம்சனுக்கு வழிவிட வேண்டும்.

ஏனெனில், ரிஷபந்துக்கு அணியின் தேர்வு குழுவினர் ஏராளமான வாய்ப்பு தந்து விட்டனர். இதனால், சஞ்சு சாம்சனின் வருகை ரிஷபந்திற்கு நிச்சயம் எச்சரிக்கையாக இருக்கும்.

ரிஷப் பந்த் பலமுறை பல்வேறு விதமான மனநிலையில் களமிறங்கி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மோசமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்கு சஞ்சு சாம்சன் பெயர்தான் இருக்கிறது. அதே சமயம் டோனியையும் மறக்கவில்லை. ரிசப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் இனி எவ்வாறு விளையாட போகிறார்கள் என்பதை பொறுத்து டோனிக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என்று விவி லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்