மலிங்காவை விட வேறு யாரையும் சிறந்தவராக அனுமதிக்க முடியாது: கம்பீரமான பதிலுடன் இதயங்களை வென்ற மெக்லெனகன்

Report Print Basu in கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி வீரர் மிச்செல் மெக்லெனகன், இலங்கை வீரர் மலிங்காவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 19 அன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ள ஐபிஎல் 2020 ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மெக்லெனகனை அணியில் தக்க வைத்துக் கொண்டது,

சமீபத்தில், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த வெளிநாட்டு பந்து வீச்சாளராக மெக்லெனகன் மலிங்காவை விஞ்சுவதைப் பார்க்க விரும்புகிறேன் என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர் கூறினார்.

கடந்த சீசனில் 12 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளுடன் மும்பை இந்தியன்ஸ் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்த மலிங்கா, இதுவரை 122 ஆட்டங்களில் இருந்து 170 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.

எங்கள்(மும்பை) அணியின் மிகப் பெரிய வெளிநாட்டு பந்து வீச்சாளராக நீங்கள் மாலிங்காவை விஞ்சுவீர்கள் என்று நம்புகிறேன். மெக்லெனகன் நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம், உங்களை மீண்டும் ஐபிஎல் தொடரில் பார்க்க காத்திருக்கிறோம் என்று மும்பை ரசிகர் ட்விட்டரில் எழுதினார்.

இந்த ட்விட்டுக்கு மெக்லெனகன் சிறந்த பதிலை அளித்தார், மேலும் ஐபிஎல்லில் இதுவரை முன்னணி விக்கெட் எடுத்த வீரரான மலிங்காவை விட வேறு யாரையும் சிறப்பாக அனுமதிக்க முடியாது என்றார்.

அந்த மேதைக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மலிங்காவை விட சிறந்தவராக யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று மிச்செல் மெக்லெனகன் கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்