அடுத்தாண்டு ஐபிஎல் தொடரோடு ஓரங்கட்டப்படும் வீரர்களில் வரிசையில் இலங்கை வீரர்!

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரோடு சில வீரர்கள் ஓரம் கட்டப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடருக்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளிநாட்டில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதன் காரணமாகவே இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக ஏராளமான வெளிநாட்டு வீரர்கள், உள்ளூர் வீரர்கள் ஆசைப்படுகின்றனர்.

அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளுக்காக ஆடிய வீரர்கள் சிலருக்கு அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடர் தான் கடைசி தொடராக இருக்கும் எனவும் வீரர்களின் உடற்தகுதி, வயது, திறன் மற்றும் இளம் வீரர்களின் வரவேற்பு ஆகிவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

அந்த வீரர்களின் வரிசையில் இலங்கையை சேர்ந்த மலிங்காவின் பெயரும் அடிபட்டுள்ளது. டி20 போட்டிகள் வந்த போது தன்னுடைய யார்க்கர் பந்தின் மூலம் அசுர வேகத்தில் மளமளவென விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா, அதன் பின் ஜொலிக்க தவறினார்.

முன்பு போல் பந்து வீச்சில் வேகம் இல்லாதது, உடற் தகுதி போன்ற பிரச்னைகளை மலிங்கா சந்தித்தார். இதனாலே 2018-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் மலிங்காவை மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் எடுக்காமல் போனதால், அவரை வேறு எந்த அணியும் எடுக்காமல் போக, பின் வேறு வழியின்றி அவரை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்தது.

இதையடுத்து பின் மீண்டும் 2018-ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட மலிங்கா, முக்கியமான தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவருக்கு இலங்கை அணியிலும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தற்போது மீண்டும் மலிங்காவின் பந்து வீச்சு அந்தளவிற்கு இல்லாத காரணத்தினால், அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரோடு நடையை கட்டலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மலிங்காவை தொடர்ந்து, இந்திய வீரர் அமித் மிஸ்ரா, அவுஸ்திரேலியா வீரர் வாட்ஷன், அம்பத்தி ராயுடு, ஹர்பஜன் சிங்கிற்கு இந்த தொடர் கடைசி தொடராகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்