ஐபிஎல்-ல் டோனி ஜொலிப்பதை பொறுத்தே அவரது எதிர்காலம் - ரவிசாஸ்திரி

Report Print Abisha in கிரிக்கெட்

2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியில் டோனியின் செயல்பாடுகள் பொறுத்தே அவரது எதிர்காலம் இருக்கும் என்று இந்திய அணியின் தலைமை பயிர்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

உலககோப்பையை இந்திய அணி தவறவிட்டத்திலிருந்து டோனி எந்தபோட்டியிலும் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரிஷபந்த் ஒவ்வொரு போட்டிக்கும் தேர்வு செய்யப்படுகிறார்.

இது குறித்து பேசியுள்ள ரவிசாஸ்திரி, ஒவ்வொருவரின் மனதில் உள்ள கேள்வி டோனியின் எதிர்காலம் குறித்துதான். அவர் அணியில், இடம் பெறுவாரா என்பது 2020 ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்தே அமையும்.

டி20 உலகோப்பைக்கு பின் ஐபிஎல் பெரிய போட்டியாகும். அதில், தான் நாட்டுக்காக ஆட உள்ள 17 வீரர்களை அடையாளம் காண முடியும் என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், டோனி இடம்பெறவில்லை. ஆனால், ராஞ்சியில் 23 வயதிற்குட்பட்டோர் அணியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்