டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் டாப் 10-க்குள் வந்த இலங்கை வீரர்: முதலிடத்தில் யார்?

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணி வீரரான துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னே டெஸ்ட் வீரர்களுக்கான துடுப்பாட்ட வரிசையில் அதிரடியாக முன்னேறியுள்ளார்.

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் முடிவு பெற்ற நிலையில், ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் அவுஸ்திரேலிய அணியி நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் 931 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த படியாக வெறும் மூன்று புள்ளிகள் மட்டுமே குறைவாக இந்திய வீரர் கோஹ்லி 928 புள்ளிகளுடனும், நியூசிலாந்து வீரர் கானே வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

இந்த தரவரிசை பட்டியலில் சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே 723 புள்ளிகளுடன் இரண்டு இடங்கள் முன்னேறி 7-ஆம் இடத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்