லஞ்சம் வழங்க முயன்ற விவகாரத்தில் சிக்கிய சனத் ஜெயசுந்தர: ஐசிசி தடையை எதிர்த்து அதிரடி

Report Print Basu in கிரிக்கெட்

ஐசிசி தடை செய்வதற்கான முடிவை எதிர்த்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் செயல்திறன் ஆய்வாளர் சனத் ஜெயசுந்தர அதிரடி நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.

ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக கடந்த மே மாதம் சனத் ஜெயசுந்தர மீது இரண்டு பிரிவுகளில் ஐசிசி குற்றம்சாட்டியது.

அதன் விளைவாக உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்திறன் ஆய்வாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசுந்தர நீக்கப்பட்டார்.

வீரர்கள் தேர்வு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு லஞ்சம் வழங்க முயன்றதாக சனத் ஜெயசுந்தர மீது குற்றம்சாட்டப்பட்டது. 14 நாட்களுக்குள் சனத் ஜெயசுந்தர குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் ஐசிசி உத்தரவிட்டது.

இந்நிலையில், ஐசிசி அவரை தடை செய்வதற்கான முடிவை எதிர்த்து ஜெனீவாவைச் சேர்ந்த விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக இலங்கை முன்னாள் தேசிய கிரிக்கெட் ஆய்வாளர் சனத் ஜெயசுந்தரா தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...