இலங்கை கிரிக்கெட் வீரர் உருக்கமுடன் நன்றி... இது எப்போதும் மறக்க முடியாது என்று பதிவு

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் ஆல் ரவுண்டரான திசாரா பெரேரா அபுதாபியில் நடந்த டி10 தொடர் முடிந்த நிலையில், நன்றி தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் கடந்த 15-ஆம் திகதி முதல் 24-ஆம் திகதி வரை அபுதாபி டி10 லீக் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையிலான Deccan Gladiators அணியும், கிறிஸ் லின் தலைமையிலான Maratha Arabians அணியும் மோதின, இப்போட்டியில் மராத்தா அரபியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த தொடரில் இலங்கையின் ஆல் ரவுண்டரான திசாரா பெரெரா பங்களா டைகர்ஸ் அணிக்கா விளையாடினார். இவரின் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது.

இதையடுத்து தொடர் முடிந்ததால், அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அணியில் இருந்த அனைவருக்கும் நன்றி, உங்களின் ஆதரவுக்கு நன்றி, இது ஒரு சிறந்த அனுபவும், மறக்க முடியாத அனுபவம், இது ஒரு அணி போன்று இல்லை, குடும்பம் போன்று இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்