ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து மைதானத்தையே மிரள வைத்த இந்திய வீரர்: வைரல் வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

ஜார்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தியுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி டிராபி 2019-20 தொடரில் ஜார்கண்ட்-மும்பை அணிகள் மோதின. இதில், ஜார்கண்ட் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் மும்பை அணியில் விளையாடிய சிவம் துபே மீண்டும் தனது அதிரடி துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சிவம் 11 பந்தில் 23 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.

குறிப்பாக ஜார்கண்ட் சுழற்பந்து வீச்சாளர் உத்கர்ஷ் சிங் வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து மைதானத்தையே மிரள வைத்தார்.

சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் ஜார்கண்ட் அணியை வீழ்த்திய மும்பை அணி, அடுத்து போட்டியில் கர்நாடகா அணியுடன் மோதவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்