கண் இமைக்கும் நேரத்தில் அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்த நியூசிலாந்து வீரர்... ஜாண்டி ரோட்சை நினைவுபடுத்திய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் சாண்ட்னர் அசுர வேகத்தில் வந்த பந்தை அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்தது, சக வீரர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே டி20 தொடர் முடிந்துவிட்டதால், இரு அணிகளுக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மவுண்ட் மவுன்கனுய் மைதானத்தில் கடந்த 21-ஆம் திகதி துவங்கியது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில் குறித்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஓலி போப் ஆப் திசையில் அடித்த பந்தை, அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த சாண்ட்னர், அந்தரத்தில் பறந்து அபாரமாக கேட் பிடித்தார்.

இதைக் கண்ட ஓலி போப் அப்படியே ஆடி போய் பெளலியன் திரும்பினர். சாண்ட்னர் பிடித்த கேட்ச் அப்படியே மீண்டும் ஜாண்டி ரோட்ஸை நினைவுக்கு கொண்டு வருவதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்