இந்திய வீரர்களை ஆச்சரியப்படுத்திய வங்கதேச வீரர்... வித்தியாசமாக சிக்ஸர் அடித்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர் அடித்த சிக்ஸரை பார்த்து கோஹ்லி உட்பட இந்திய வீரர்கள் சிலர் ஆச்சரியப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-வங்கதேச அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு போட்டியாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை பதிவு செய்தது. அதோடு தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷமி லெக் திசையில் வீசிய பந்தை, வங்கதேச வீரர் மெகிடி ஹாசன் தடுத்து ஆட, ஆனால் பந்தானது சிக்ஸர் கோட்டை தாண்டி விழுந்தது.

இதனால் இதைக் கண்ட இந்திய வீரர்கள், கோஹ்லி, ரோகித் மற்றும் புஜாரா இது எப்படி என்பது போல் ஆச்சரியத்துடன் பார்த்த வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்