சிங்களத்தில் எழுதியிருந்த புகைப்படத்தை பதிவிட்ட இலங்கை வீரர்! என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான தினேஷ் சண்டிமால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சிங்களத்தில் எழுதியிருந்த புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

இலங்கை அணியின் விக்கெட் கீப்பரும், நிதான துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சண்டிமால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

குறித்த புகைப்படத்தில் சிங்களம் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு கீழே அவர், தாய் நிலம் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்காதீர்கள், தாய் நிலத்திற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை என்று பாராட்டி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்