கோஹ்லியை அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து வெளியேற்றிய வங்கதேச வீரர்! ஆக்ரோசமான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து மிரட்டிய கோஹ்லியை தன்னுடைய அபாரமான கேட்ச் மூலம் தஜுல் இஸ்லாம் வெளியேற்றிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பகல், இரவு டெஸ்ட் போட்டியாக நடக்கும் இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்தியா முதல் முறையாக விளையாடும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி என்பதால், மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

அதன் படி முதலில் ஆடிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 106 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, அடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி சற்று முன் வரை 9 விக்கெட் இழப்பிற்கு 331 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இப்போட்டியில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி சதமடித்து மிரட்டினார். இது டெஸ்ட் தொடரில் அவர் அடித்த 27-வது சதமாகும். தன்னுடைய அதிரடி சதத்தால் வங்கதேச அணிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த கோஹ்லியை அவுட்டாக்க முடியாமல் வங்கதேச பந்து வீச்சாளர்கள் திணறினர்.

அப்போது எப்டாட் ஹொசைன் வீசிய பந்தை கோஹ்லி லெக் திசையில் அடித்து ஆட, அப்போது அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த தஜுல் இஸ்லாம் அந்தரத்தில் பறந்து அபராமாக கேட்ச் பிடித்து கோஹ்லியை வெளியேற்றினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்