பிங்க் பந்து டெஸ்டில் சதம்..! ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து.. புதிய மைல் கல்லை எட்டினார் கோஹ்லி

Report Print Basu in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

முதல் நாள் முடிவில் 3 விக்கெடுக்கு 185 ஓட்டங்கள் எடுத்திருந்த இந்திய அணி இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்தது. இந்திய அணித்தலைவர் கோஹ்லி 136 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் கோஹ்லி. இது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லியின் 27வது சதமாகும்

அதுமட்டுமின்றி, அணித்தலைவராக டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்க பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி கோஹ்லி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் 25 சதங்களுடன் தென் ஆப்பிரிக்கா வீரர் கிரேம் ஸ்மித் உள்ளார். கோஹ்லி 20 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், பாண்டிங் 19 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

அதேசமயம், கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களான போட்டிகளிலும் அதிக சதம் அடித்த அணித்தலைவர் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை சமன் செய்துள்ளார் கோஹ்லி.

ரிக்க பாண்டிங் அணித்தலைவராக 376 இன்னிங்ஸில் விளையாடி 41 சதங்கள் அடித்துள்ளார். கோஹ்லி 188 இன்னிங்ஸில் விளையாடி 41 சதங்கள் அடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா வீரர் கிரேன் ஸ்மித் 369 இன்னிங்ஸ் விளையாடி 33 சதங்கள் அடித்துள்ளார்.

மேலும், சர்வதேச போட்டிகளில் கோஹ்லி அடித்த 70வது சதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்