அசுரவேகத்தில் தாக்கிய பந்து... மிரண்டு போன வங்கதேச வீரர்! அடுத்த சில நிமிடங்களில் கோஹ்லி செய்த செயலின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரருக்கு உதவ இந்திய மருத்துவர் வந்த வீடியோவை பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் வரலாற்று(பகல்-இரவு) சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது.

அதன் படி முதலில் ஆடிய வங்கதேசம் அணி, இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 106 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன் பின் ஆடிய இந்திய அணியில் புஜாரா 55 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அணியின் தலைவர் கோஹ்லி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவரும் அரைசதம் அடித்து 59 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்தது. கோஹ்லி 59 ஓட்டங்களுடனும், ரஹானே 23 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச அணி வீரரான Nayeem Hasan வேகபந்து வீச்சாளரான மொகமது ஷமியின் பந்து வீச்சை எதிர்கொண்டார். அப்போது பந்தானது பவுன்சராக வீசப்பட்டதால், ஹெல்மட் மீது பலமாக தாக்கியது.

இதனால் நிலைகுலைந்து போன Nayeem Hasan-ஐ நன்றாக இருக்கிறாரா? என்பதை அறிவதற்காக உடனே இந்திய மருத்துவரை கோஹ்லி அழைத்ததாக கூறப்படுகிறது.

அதன் பின் அவர் Nayeem Hasan-ன் ஹெல்மட்டை பார்த்து அவரின் கண் மற்றும் தலையை இந்திய மருத்துவர்கள் சோதித்து பார்த்தார்.

ஒன்றும் இல்லை, தொடர்ந்து விளையாடலாம் என்று அவர் கூறிய பின்னர் Nayeem Hasan விளையாடினார். அந்த நேரத்தில் வங்கதேச மருத்துவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. அதே சமயம் இந்த வீடியோவை பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதால், இது தன Spirit Of Cricket என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்