தொடர் ஓய்வில் இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் எப்படியிருக்கிறார்? அடுத்து அவர் விளையாடவுள்ள சர்வதேச போட்டி இதுதான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை விளையாடுவதே தனது குறிக்கோள் என ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் எந்தவொரு போட்டியையும் மாற்றும் திறன் கொண்டவர்.

நியூசிலாந்திற்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இரண்டு போட்டிகளை தொடர்ந்து அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவரது ஓய்வு நேரத்தில் எவ்வாறு காலத்தை கழித்தார் என்பது தொடர்பில் அவர் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், சுமார் இரண்டரை மாதங்களுக்கு எனக்கு இடைவெளி கிடைத்தது. நான் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்க அந்த ஓய்வை பயன்படுத்தினேன். நான் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சிலும் கடுமையாக உழைத்தேன்.

அத்துடன் நான் நீண்ட காலமாக போட்டிகளில் விளையாட வரவில்லை. ஆனால் நான் பாகிஸ்தான் போட்டிக்கு நன்கு தயாராக இருக்கிறேன்.

2009 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு நாங்கள் பாகிஸ்தானுக்குச் செல்கிறோம். இந் நிலையில் எங்கள் ஒருநாள் மற்றும் டி - 20 அணிகள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தன.

இதேவேளை டெஸ்ட் அணி சுமார் 10 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு புறப்படவுள்ளது. ஆகையினால் தனிப்பட்ட முறையில், நான் சுற்றுப் பயணத்திற்கு நன்கு தயாராக இருக்கிறேன்.

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை விளையாடுவதே தனது குறிக்கோள்.

பாகிஸ்தானுடான டெஸ்ட் சுற்றுப் பயணத்தை தொடர்ந்து எங்களுக்கு அதிகளவான தொடர்கள் உள்ளன. ஆகவ‍ே அதற்கு தயாராக வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்