பாகிஸ்தான் அணியிடம் அரையிறுதியில் போராடி தோற்று வெளியேறிய இந்தியா!

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடைபெறும் இளைஞர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரை இறுதியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது.

வங்கதேசத்தின் மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று துடுப்பாட்டம் செய்த பாகிஸ்தான் இளைஞர் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 267 ரன் குவித்தது.

ஒமேர் யூசுப் 66, ஹைதர் அலி 43, கேப்டன் ரோகைல் நசீர் 35, சைப் பாதர் 47, இம்ரான் ரபிக் 28 ரன் எடுத்தனர்.

இந்திய இளைஞர் அணி பந்துவீச்சில் ஷிவம் மாவி, சவுரவ் துபே, ஹ்ரித்திக் ஷோகீன் தலா 2, சித்தார்த் தேசாய் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 268 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய இளைஞர் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து நூலிழையில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. சன்விர் சிங் அதிகபட்சமாக 76 ரன் விளாசினார்.

இதன் மூலம் பாகிஸ்தான் இளைஞர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் 2வது அரை இறுதியில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணியுடன் பாகிஸ்தான் வரும் 23ஆம் திகதி இறுதி போட்டியில் மோதவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்