சச்சினை போன்று அறிமுகமான பாகிஸ்தான் வீரர்!

Report Print Abisha in கிரிக்கெட்

சச்சினை போன்று 16வயதிலே, கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

இதில், பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரராக 16வயதே ஆன நசீம் ஷா களமிறங்கியுள்ளார். இவர், 145 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்டவராவர்.

டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவருக்கு டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை பயிற்சியாளர் வாக்கார் யூனுஸ் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நசீம் ஷா பயிற்சி ஆட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தபோது, அவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துபோனார். ஆனால், இறுதிச்சடங்கிற்கு செல்லாமல் தாயார் ஆசைப்படி தொடர்ந்து பயிற்சி ஆட்டத்தில் நசீம் விளையாடினார்.

மிக இளம் வயதில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வீரர்களில் நசீம் ஷாவும் ஒருவர். ஒருசில வீரர்கள் மட்டுமே 16 வயதில் அறிமுகமாகி உள்ளனர். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, பின்னாளில் உலகமே உற்றுநோக்கும் கிரிக்கெட் ஜாம்பவானாக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...