டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட அணி எது தெரியுமா? இந்தியாவை முந்திய இலங்கை!

Report Print Raju Raju in கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டியை கண்டுபிடித்ததாக அறியப்படும் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 1016 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது.

ஆனால் வெற்றி சதவீதத்தில் அந்த அணி முதலிடத்தில் இல்லை.

அவுஸ்திரேலிய அணி 825 போட்டிகளில் விளையாடி 388 வெற்றிகளை குவித்து 47.03 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி 435 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடி 164 வெற்றிகளை பெற்று 37.70 வெற்றி சதவீதத்துடன் இரண்டாமிடத்தில் உள்ளது.

இப்பட்டியலில் இங்கிலாந்து அணி 1016 போட்டிகளில் விளையாடி 368 வெற்றிகளை பெற்று 36.22 சதவீதத்துடன் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது.

நான்காம் இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி 423 போட்டிகளில் விளையாடி 136 வெற்றிகளை பெற்றுள்ளது.

அதன் வெற்றி சதவீதம் 32.15 ஆகும். இப்பட்டியலில் இலங்கை அணி 285 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 91 வெற்றிகளை பெற்று 31.92 சதவீத வெற்றியுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 544 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 173 வெற்றிகளுடன் 31.80 சதவீத வெற்றி அடிப்படையில் ஆறாம் இடத்தில் உள்ளது.

இப்பட்டியலில் இந்திய அணி 539 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 156 வெற்றிகளுடன் 28.94 சதவீத வெற்றியுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்