டோனிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்...! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில்?

Report Print Abisha in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், இதில் டோனி இடம் பெறுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்த தொடருக்கான அணி தேர்வு இன்று நடைபெற உள்ளது.

இதில், அதிக போட்டிகளில் விளையாடிய ரோகித்துக்கு ஓய்வளிக்கப்படும் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட உள்ளார்.

நீண்ட ஓய்வில் இருக்கும் டோனி, இந்த தொடரில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் அவர் வலை பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஒரு உற்சாகத்தை ஊட்டியது.

டோனியின் மாற்று என தேர்வுக்குழுவால் கூறப்படும் ரிஷப் பந்த் சமீபத்திய போட்டிகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இதனால் டோனி மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்