வங்கதேச பிரிமீயர் லீக் டி20: ஐந்து இலங்கை வீரர்களை ஏலத்தில் எடுத்த அணிகள்

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேசத்தில் நடைபெறவிருக்கும் பிரிமியர் லீக் டி20 தொடருக்கான ஏலம் நடைபெற்று முடிந்த நிலையில், இலங்கை வீரர்கள் ஐந்து பேர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் போன்று, வங்கதேசத்தில் உள்ளூர் தொடரான வங்கதேசம் பீரியல் லீக் டி20 ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடைபெறவுள்ள இத்தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 439 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 620 கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.

இருப்பினும் வீரர்கள் ஏலத்தில் வெறும் 33 வெளிநாட்டு வீரர்களே தொடரில் பங்கெடுக்கும் 7 அணிகளினால் வாங்கப்பட்டுள்ளனர். அதில் இலங்கையைச் சேர்ந்த 5 கிரிக்கெட் வீரர்கள் அடங்குவர்.

இந்த இலங்கையர்களில் தசுன் ஷானக்க மற்றும் குசல் பெரேரா போன்ற அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் கொமில்லா வோரியர்ஸ் அணிக்காகவும், அதேநேரம், 21 வயது நிரம்பிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாந்து சட்டொக்ரம் சேலஞ்சர்ஸ் அணியினால் வாங்கபட்டிருக்கின்றனர்.

அவிஷ்க பெர்னாந்து சட்டொக்ரம் சேலஞ்சர்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார். இவர் மற்றொரு அதிரடி வீரரான கிறிஸ் கெயிலுடன் இணைந்து அந்தணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீர்ராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஏற்கனவே இடம்பெற்ற இந்த டி20 தொடர்களில் ஆடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கும் இலங்கை T20 அணியின் முன்னாள் தலைவரான திசர பெரேரா, டாக்கா பிளாட்டூன் அணிக்காக ஆடவுள்ளார். சுழற்பந்து சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிஸ் சில்லட் தன்டர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்