இன்ஸ்டாகிராமில் போஸ்ட்: அவுஸ்திரேலியா வீராங்கனைக்கு தடை

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

போட்டி தொடங்குவதற்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட அவுஸ்திரேலிய வீராங்கனையான எமிலி ஸ்மித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பிக்பாஸ் தொடரில் ஹரிகேன்ஸ் அணிக்காக எமிலி ஸ்மித் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2ம் திகதி சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடும் முன்பே, தன்னுடைய அணி வீராங்கனைகள் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

கிரிக்கெட் அவுஸ்திரேலியா விதிகளின்படி இது குற்றம் என்பதால் எமிலி ஸ்மித்துக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதனால் பிக்பாஸ் லீக், பெண்களுக்கான தேசிய கிரிக்கெட் லீக்கிலும் எமிலியால் பங்கேற்க முடியாது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்