இலங்கையுடன் மோதிய இறுதிப் போட்டி: டோனி சொன்ன அந்த வார்த்தையால் தவறவிட்டேன் என காம்பீர் பேட்டி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர், 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தன்னால் ஏன் சதமடிக்க முடியாமல் போனது என்று தற்போது மனம் திறந்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் நடைபெற்றது.

இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதிய இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. காம்பீர் மற்றும் டோனியின் அற்புதமான ஆட்டத்தால், இந்திய அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இப்போட்டியில் வெற்றிக்கு முக்கிய காரணமான காம்பீர் 97 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மூன்று ஓட்டம் எடுக்காமல் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து அவுட்டானார்.

இது குறித்து காம்பீர் இப்போது மனம் திறந்துள்ளார். பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த போட்டியில், அன்றைய போட்டியின் ஓவர் முடிந்தவுடன், நீங்கள் சதமடிக்க இன்னும் 3 ஓட்டங்கள் மட்டும் தான் தேவை என்று டோனி கூறினார்.

நான் எப்போதுமே அணியின் வெற்றிக்கான இலக்கை மட்டுமே நோக்கி ஆடுவேன், அன்றைய தினமும் அப்படி தான் விளையாடிக் கொண்டிருந்தேன், அப்போது திடீரென்று டோனி இப்படி கூறியவுடன் எனக்கும் சதமடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

அந்த பதற்றத்தில் நான் அவுட்டாகிவிட்டேன், டோனி மட்டும் அதை ஞாபகப்படுத்தாமல் இருந்தால் நிச்சயமாக நான் சதமடித்திருப்பேன் என்று கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்