அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மலிங்கா விளையாட போகும் அணி இது தான்: உறுதி செய்த நிர்வாகம்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவை மும்பை இந்தியன்ஸ் தக்க வைத்து கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும், உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு(2020) துவங்கவுள்ளது.

இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19-ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு எட்டு அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம்.

அதேபோல் மற்ற அணிகளிடம் இருந்து அந்தணி எந்த வீரர் வேண்டுமோ அவரை வாங்கிக் கொள்ளலாம். இது நவம்பர் 14-ஆம் திகதி வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 15-ஆம் திகதி எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வெளியேற்றியுள்ளது மற்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்ற விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 11 ஆண்டுகளாக விளையாடி வரும் லசித் மலிங்காவை அந்த அணி தக்க வைத்து கொள்ள முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு பல முறை முக்கிய காரணமாக இருந்தவர் மலிங்கா, இருப்பினும் கடந்த 2018-ஆம் ஆண்டு அவரின் மோசமான பார்ம் காரணமாக மும்பை அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.

ஆனால் அவரை எந்த அணியும் எடுக்காத காரணத்தினால், மும்பை அணி மலிங்காவை பந்து வீச்சு ஆலோசகராக அந்த ஆண்டு மும்பை அணிக்கு நியமித்தது.

அதன் பின் இலங்கை அணியில் மீண்டும் இணைந்த மலிங்கா அற்புதமான பந்து வீச்சை வெளிப்படுத்த 2019-ஆம் ஆண்டிற்கான மும்பை அணியில் முக்கிய வீரராக மலிங்கா இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்