இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்ய போல் இடது கையில் பந்து வீசி மிரள வைத்த அஸ்வின்

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்ய போல் இடது கையில் பந்து வீசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்தூரில் நடந்த வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றே நாளில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இந்நிலையில், இந்தூரிலே தங்கியிருக்கும் இந்திய அணி பிங்க் பந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தூரில் பயிற்சியின் போது அஸ்வின், இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூரிய போல் இடது கையில் பந்து வீசி அசத்தினார். மேலும், இடது கையிலும் துடுப்பாடி பயிற்சி மேற்கொண்டார்.

1996 ஆம் அண்டு கொல்கத்தாவில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா-இலங்கை மோதிய போட்டியில் ஜெயசூரிய அசத்தலாக பந்து வீசி இந்திய வீரர்களை மளமளவென விக்கெட் எடுத்தார் என்பது நினைவுகூரதக்கது.

கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரிய, 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட ஐசிசி தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்