எதிரணியில் பீல்டிங் செய்த சகோதரர்! அவர் மூக்கை உடைத்த துடுப்பாட்ட வீரர்... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் தனது சகோதரர் பீல்டிங் நின்ற நிலையில், துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து அவர் மூக்கை பதம் பார்த்ததில் இரத்தம் கொட்டியது.

அவுஸ்திரேலியாவில் மார்ஷ் கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டுவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் மேற்கு அவுஸ்திரேலியா - தெற்கு அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் தெற்கு அவுஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அந்த அணியின் வெஸ் அகர் அடித்த ஒரு பந்தை கேட்ச் செய்ய முயற்சித்த போது அவரது சகோதரரான ஆஷ்டன் அகரை பதம் பார்த்தது.

அதாவது சில அடிகள் ஓடி வந்து அவர் பந்தைப் பிடிக்க தடுமாற, பந்து நேராக அவரது மூக்கின் மேல்பகுதியில் பலமாக தாக்கி ரத்தம் கொட்டியது.

உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்