வேகப்பந்து வீச்சாளர்கள் திறனில் உச்சத்தில் உள்ளனர் - விராட் கோஹ்லி பெருமிதம்

Report Print Abisha in கிரிக்கெட்

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களை கேப்டன் விராட்கோஹ்லி புகழ்ந்துள்ளார்.

வங்காள தேசத்துக்கு எதிரான முதல், டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீசாளர்கள் முகமது ஷமி, இஷந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் 14விகெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

இதுதொடர்பாக, இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சு திறனில் உச்சத்தில் உள்ளனர். இவர்கள் பந்து வீசும்போது, எந்த ஆடுகளமும், நல்ல ஆடுகளமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

ஒவ்வொரு பகுதிகளிலும் நமது பவுலர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். எந்த ஒரு கேப்டனும் இத்தகைய வலிமையான பந்து வீச்சைத்தான் விரும்புவார். இது ஒரு கனவு கூட்டணி போன்றது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சாதனைகளையும், புள்ளி விவரங்களையும் ஒவ்வொருவரும் பார்க்கிறார்கள். அது தொடர்ந்து சாதனை புத்தகத்தில் தான் இருக்கும். நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. நாங்கள் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை மென்மேலும் மேம்படுத்துவதை நோக்கி பயணிக்கிறோம். இதற்காக அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துகிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...