அடிச்சு விளையாடுங்க! சும்மா கட்டைய வைக்காதீங்க... அகர்வால்-ஜடேஜாவால் கோபமான ரோகித் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை அடித்து ஆடும் படி சைகை காட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா-வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது.

அதன் பின் ஆடிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால பாலோ ஆன் ஆன வங்கதேச அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் மயங்க அகர்வால் மற்றும் ஜடேஜா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தது.

அப்போது பெளலியனில் இருந்த ரோகித் சர்மா, மைதானத்தில் இருந்த இவர்களை பார்த்து, நிதானமாக ஆடாமல் அடித்து ஆடுங்கள், போட்டியை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று செய்கை செய்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த கோஹ்லி மற்றும் சக வீரர்கள் சிரித்தனர். ரோகித் சர்மாவின் அந்த சைகைக்கு பின் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் மயங்க் அகர்வால் 243 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 60 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்