ஸ்டம்ப்பை பறக்கவிட்டு... மைதானத்தையே மிரள வைத்த உமேஷ் யாதவ்: மளமளவென சரிந்து திணறும் வங்கதேசம்

Report Print Basu in கிரிக்கெட்

இந்தூர் டெஸ்டில் இந்திய வீரர் உமேஷ் யாதவ், வங்கதேச அணியின் ஆரம்ப துடுப்பாட்டகாரரை சிறப்பாக பந்து வீசி போல்டாகி ஸ்டம்ப்பை பறக்க விட்டு மிரள வைத்துள்ளார்.

நவம்பர் 14ம் திகதி தொடங்கிய முதல் டெஸ்டில் முதலில் துடுப்பாடி வங்கதேச அணி 150 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடி இந்தியா நாள் ஆட்ட நேர முடிவில் 493 ஓட்டங்களுக்கு டிக்ளேர் செய்தது.

இன்று போட்டியின் 3வது நாள் 343 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேச அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. 5வது ஓவரிலேயே உமேஷ் யாதவ் வங்கதேச ஆரம்ப துடுப்பாட்டகாரர் Kayes-ஐ போல்டாகி ஸ்டம்ப்பை பறக்கவிட்டார்.

உணவு இடைவேளை முடிந்து தொடர்ந்து விளையாடி வரும் வங்கதேச அணி 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறிவருகிறது.

தற்போது வரை முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷாந்த சர்மா மற்றும் உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்