மீண்டும் களமிறங்க தயாராகும் டோனி! ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலக கோப்பை தொடருக்கு பிறகு மகேந்திர சிங் டோனி மீண்டும் தனது வலை பயிற்சியை ராஞ்சியில் துவங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தாண்டு ஜூலை மாதத்தில் உலக கோப்பை 2019 போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா அரையுறுதியுடன் வெளியேறியது.

இந்த தொடருக்கு பிறகு இந்தியா பங்கேற்ற பல சர்வதேச போட்டிகளிலிருந்து டோனி விலகினார்.

இந்நிலையில் ராஞ்சியின் ஜேஎஸ்சிஏ மைதானத்தில் அவர் மேற்கொண்ட வலைபயிற்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த உலக்கோப்பை போட்டிக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை டோனி தவிர்த்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அந்த சமயத்தில் காஷ்மீரில் ராணுவ பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

இதேபோல வங்கதேசத்திற்கு எதிரான சர்வதேச டி20 தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், டோனியை விட்டு இந்தியா விலகி வந்துவிட்டதாக தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்திருந்தார்.

அவருக்கு மாற்றாக ரிஷப் பந்த் இருப்பார் என்றும் கூறினார்.

ஆனால் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால், டோனிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஞ்சியில் டோனி மீண்டும் தனது வலைபயிற்சியை தொடங்கியதன் மூலம் அவர் மீண்டும் தன்னை சர்வதேச போட்டிகளில் இணைத்து கொள்ள தயார் ஆகிறார் என தெரியவந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்