இரட்டை சதம் விளாசிய மயங்க்: சைகையால் பதிலளித்த கோஹ்லி- மைதானத்தில் சுவாரசியம்

Report Print Kavitha in கிரிக்கெட்

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய மயங்க் அகர்வாலுக்கு விராட் கோஹ்லி சைகையில் பதிலளித்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நேற்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற வங்கதேச அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 150 ஓட்டங்களில் சுருண்டது.

இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்தது. புஜாரா 43 ரன்னுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது 3-வது சதத்தை பதிவு செய்தார்.

அதன்பின் வேகமெடுத்த மயங்க், ரன் குவிப்பில் ஈடுபட்டு 150 ஓட்டங்கள் எடுத்தார், அப்போது டிரெஸ்ஸிங் ரூமில் இருந்துகொண்டு கோஹ்லி, 200 அடியுங்கள் என சைகை காட்டு ஓகே சொன்னார் மயங்க்.

தொடர்ந்து இரட்டை சதம் அடித்தது, மயங்க் கைகளை உயர்த்தி ‘200 கேட்டீர்கள், அடித்துவிட்டேன். வேற என்ன...’ என்பது போல் சைகை காட்டினார்.

'சரி, 300 அடி' என்று கோலி ரிப்ளை செய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த மயங்க் அகர்வால், 243 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்