வாழ்க்கையில் உள்ள சவால்கள்... கிரிக்கெட்டை விட இதான் எனக்கு முக்கியம்.. ஆச்சரியப்படுத்தும் இந்திய வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் கிரிக்கெட்டில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வெகு எளிதாக கடக்கும் மனநிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாக ஷிகர் தவான் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள முன்னணி வீரர்களில் ஒருவராக தவான் உள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து தான் எந்தவிதமான கவலையும் கொள்ளவில்லை.

என்னுடைய வழியில் வருவதை அப்படியே ஏற்கிறேன். ஆன்மீகத்தில் எனக்கு நாட்டம் அதிகமாக உள்ளது.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் கிரிக்கெட்டில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வெகு எளிதாக கடக்கும் மனநிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கை அனைவருக்கும் பல சவால்களை அளிக்கிறது, அதை கடந்து வெளிவர வேண்டும், எனக்கு கிரிக்கெட்டை விட மன ஆரோக்கியம் தான் முக்கியம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்