வங்கதேச வீரரின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஷமி... வாயை பிளந்து பார்த்த கோஹ்லி வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷமியின் பந்து வீச்சில் முஸ்பிகுர் ரஹீம்மின் போல்ட்டாகி வெளியேறிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-வங்கதேச அணிகளுக்கிடையேயான டி20 தொடர் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் துவங்கியது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி ஷமியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் வங்கதேச அணியின் தடுப்பு சுவர் என்றழைக்கப்படும் முஸ்தபிகுர் ரஹீம், அணியின் தலைவர் மொனுமில் ஹக்யூடன் சேர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

முஸ்தபிகுர் ரஹீம் நிலைத்து நின்று ஆடிவிட்டால் வங்கதேச அணி வலுவான நிலைக்கு சென்றுவிடும் என்பதால், அவரின் விக்கெட்டை வீழ்த்துவதிலே கோஹ்லி கவனமாக இருந்தார்.

அதன் படி 43 ஓட்டங்கள் எடுத்திருந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஸ்பிகுரை ஷமி தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் போல்டாக்கி வெளியேற்றினார். அப்போது கோஹ்லி என்ன ஒரு பவுலிங் என்பது போல் செய்கை செய்தார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்