வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிக பெரிய சாதனை படைத்த தமிழக வீரர்: என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரில் 250வது விக்கெட்டை வீழ்த்திய சாதனையை படைத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்தியா –வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 150 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன்மூலம் சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரில் 250வது விக்கெட்டை வீழ்த்திய சாதனையை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இதற்கு முன்னால் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த சாதனையை செய்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு பிறகு அந்த பட்டியலில் அஸ்வின் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்