முதல் இன்னிங்சில் 150 ஓட்டங்களுக்கு சுருண்டது வங்கதேசம்.. இந்தியா அபார பந்துவீச்சு

Report Print Basu in கிரிக்கெட்

இந்தூரில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டி-20 தொடரை இழந்த நிலையில், உலக டெஸ்ட சம்பியன்ஷிப்பின் அங்கமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று நவம்பர் 14ம் திகதி இந்தூர் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன் படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வங்கதேச அணி 150 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 43 ஓட்டங்கள் எடுத்தார்.

BCCI

இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த சர்மா, உமேஷ் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.

BCCI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்