ராஜஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டார் ரஹானே

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியிலிருந்து ரஹானே நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், வீரர்களை மாற்றிக்கொள்ள, விடுவிக்க இன்றுடன் காலக்கெடு முடிகிறது.

இதனையடுத்து பல வீரர்கள் மாறிய நிலையில் ராஜஸ்தான் அணியிலிருந்த ரஹானே நீக்கப்பட்டுள்ளார்.

2011ம் ஆண்டிலிருந்து ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ரஹானேவை, கடந்தாண்டு அணித்தலைவராக நியமித்தது நிர்வாகம்.

எனினும் தொடர் தோல்விகளை சந்தித்ததால் ரஹானே நீக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவராக்கப்பட்டார்.

ரஹானே மீதான அதிருப்தியால் ராஜஸ்தான் அணி அவரை நீக்க, டெல்லி அணி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்