10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் களமிறங்கும் பாகிஸ்தான் டெஸ்ட் அணி... இலங்கைக்கு குவியும் நன்றி

Report Print Basu in கிரிக்கெட்

பாகிஸ்தானில் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவுள்ளதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வெளிநாடுகள் தயக்கம் காட்டினர்.

இந்நிலையில், சமீபத்தில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20 தொடரில் விளையாடியது. இதில், பாகிஸ்தான் அணியை இலங்கை வைட் வாஷ் செய்தது.

இதன் போது சிறப்பாக வீரர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கியதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இந்நிலையில், இரு அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபர் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், மைதானத்தை தெரிவு செய்ததில் இழுபறி நீடித்ததால் டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் பின், டெஸ்ட் கிரிக்கெட் டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு திரும்பகிறது, இலங்கை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் விளையாடும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முதல் போட்டி டிசம்பர் 11-15ம் திகதி வரை ராவல்பிண்டி மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி 19-23ம் திகதி வரை கராச்சி தேசிய நடைபெறும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட வீரர்களை அனுப்பும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்